காலை 9மணிக்கு ஆரம்பமான இச் சுற்றுப்போட்டி யில் Batch 2000 குழுவின் 8 அணிகள் மோதின.
Gold Final, Silver Final என இரண்டு இறுதிப் போட்டிகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். லீக் போட்டிகளில் வெற்றி பெற்று முதலில் இடம்பெற்ற Silver இறுதிப் போட்டியில் Baghdad Bulls மற்றும் Kabul Lions அணிகள் மோதின இப் போட்டியில் Baghdad Bulls அணியினர் வெற்றி பெற்றனர், இப் போட்டியின் சிறந்த வீரராக 47 ஓட்டங்களை பெற்ற Baghdad Bulls அணியின் சாகிர் தெரிவானார்.
இச் சுற்றுப்போட்டி யின் மாபெரும் இறுதிப் போட்டியான Gold இறுதிப் போட்டியில் Delhi Royal மற்றும் Dhaka Riders அணிகள் மோதின. விறுவிறுப்பாக இடம் பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய Delhi Royal அணியினர் 5ஓவர்களில் 82 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்தனர், 83 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய Dhaka Riders அணியினர் 87 ஓட்டங்கள் பெற்று 2019ம் ஆண்டின் Champion ஆக தெரிவாகி Battle of the Millennium வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டனர்.
Gold இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக 44 ஓட்டங்கள் பெற்ற முஜீப் தெரிவானார்.
போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக Delhi Royal அணியின் நஸுருடீன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளராக Dhaka Riders அணியின் முஜீபும் தெரிவானார்கள்.
அதிதிகளாக Zahira கல்லூரியின் பழைய மாணவரும் முன்னணி கிரிக்கெட் விற்பன்னர்களுமான கெளரவ அல்ஹாஜ் T.A. ராசிப், கெளரவ அல்ஹாஜ் M.S. லாபிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றிபெற்ற அணிகளுக்கும் வீரர்களுக்குமான கிண்ணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன. Zahira 2000 குழுவில் சுமார் 150 உறுப்பினர் கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.