காரைதீவு நிருபர் சகா-
கல்வி அமைச்சு அரச பாடசாலைகளில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியை இன்று 16ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகளில் நடாத்தியது.
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் இவ்வரவேற்பு விழாஇன்று(16) அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடாத்தியது.
பிரதம அதிதியாக சம்மாந்துறைவலயஉதவிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டுநிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கௌரவ அதிதிகளாக சிவஸ்ரீ.ரி.சுதந்திரன் குருக்கள் இலங்கை வங்கி முகாமையாளர் கே.சசிதரன்ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரதமஅதிதி தேசியக்கொடியை ஏற்றவைக்க மாணவிகள் தேசியகீதத்தை இசைத்தனர்.
பின்பு பாடசாலைக்கொடி அதிபரால் ஏற்றப்பட்டதும் பாடசாலைக்கீதம் இசைக்கப்பட்டது.
புதிய மாணவர்களை இரண்டாம்வகுப்பு மாணவர்களால் வெற்றிலை இனிப்பு வழங்கி வரவேற்றனர். அத்துடன் ஆரம்பக்கல்விமறுசீரமைப்புத்திட்டம் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிவூட்டப்பட்டது.
மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
ஜனாதிபதி ஊடகவிருச்சான்றிதழ்பெற்றமைக்காக வி.ரி.சகாதேவராஜாவிற்கு பாடசாலைச்சமுகம் பொன்னாடை போர்த்துக்கௌரவித்தது.
புதிய மாணவர்களுக்கு அதிதிகளால்கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.