அரச நிறுவன சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 137 பேர் பணி நீக்கம்..!

ஐ. ஏ. காதிர் கான்-

கொழும்பு நகரிலுள்ள 137 அரச நிறுவனங்களில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, அப்பணிகளிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாத நடுப்பகுதி முதல் குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் கடமைகளிலிருந்து அகற்றப்படவுள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கைகள் மற்றும் விகாரைகள், பாடசாலைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனைத் தவிர, யானைகளின் பிரச்சினைகள் காணப்படும் பகுதிகளில் யானை வேலிகளை அமைத்து, அதனை நிர்வகிக்கும் நடவடிக்கைகளிலும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -