போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலை யாத்திரை செய்ய சென்ற இளைஞர்கள் 18 ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் நேற்று (11) திகதி தியகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றததடுப்பிரினாரால் நேற்று (11) மாலை 3.00 மணி முதல் ஆறு மணிவரை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கேரள கஞ்சா,,ஹெரோயின்,மதன மோதக்கய,போதை மாத்திரைகள் போன்ற மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவவர்கள் கொழும்பு,இரத்தினபுரி,பொலன்நறுவை,நீர்கொரும்பு,அனுராதபுரம், காலி,கம்பளை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இன்று,(12) திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலி}hர் மேலும் தெரிவித்தனர்.
சிவனொளி பாதமலை புனித பிரதேசத்திற்கு போதை வஸ்த்துக்களை கொண்டு செல்லவதனை தடுப்பதற்காகவும் ,போதை வஸ்த்து பாவனையின் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காகவும் ஹட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை மோப்பநாய்களின் உதவியுடன் ஆரப்பிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றை முன் தினம் (10) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது போதை வஸத்துக்களுடன் யாத்திரை சென்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.