சாய்ந்தமருது 20ஆம் வட்டார எழுச்சியின் அடுத்த நகர்வு! முதல்வர் ஸ்தலத்துக்கு விரைவு!! உறுப்பினர்களான றபீக் அஸீஸ் ஆகியோரும் இணைவு!!!

சாய்ந்தமருது 20ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை வீதி தோணா பாலத்துக்கு அருகில் உள்ள பிரதேசம் நீண்டகாலமாக கழிவுகள் கொட்டப்படும் இடமாக பாவிக்கப்பட்டு அந்த பிராந்தியமே சுகாதாரக்கேடுகள் நிறைத்த இடமாக காட்சியளித்தது. குறித்த சுகாதார மற்றும் சமூகக்கேடுகள் தொடர்பில் பல்வேறு ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சனங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தன.

20ஆம் வட்டாரத்துக்கான கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் தொழிலதிபர் எம்.வை.எம்.ஜௌபர் எடுத்துக்கொண்ட பாரிய முயச்சியின் காரணமாக 2020.01.18ஆம் திகதிமுதல் பாரிய அளவில் சுத்திகரிப்புப் பணிகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து கழிவுப்பொருட்களை திட்டமிட்டமுறையில் அகற்றுவதற்கான வழிமுறைகளை கல்முனை மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் அனுசரணையுடன் மாநகரசபை உறுப்பினர் ஜௌபர், பிரதேச மக்களுக்கு அறிவுறுத்திய அதேவேளை களத்தில் நின்று மக்களை வழிநடத்தினார்.

இரவுபகலாக இடம்பெறும் அழகூட்டும் பணியில் 2020.01.20 ஆம் திகதி கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் இணைந்துகொண்ட அதேவேளை மாநகரசபை உறுப்பினர்களான எம்.ஏ.றபீக் எம்.ஐ.ஏ.அஸீஸ் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.

இன்றைய நிகழ்வில் சுத்தப்படுத்தப்பட்ட இடங்களுக்கு மணல் இட்டு சமப்படுத்தப்பட்டதுடன் பொழுதுபோக்கு இருக்கைகளும் பொருத்தப்பட்டன. எல்லாவற்றையும் விட விசேடமாக இருள்சூழ்ந்திருந்த குறித்த பிரதேசத்துக்கு பல LED மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன. இவைகளை மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டாக எரியவிட்டனர்.

இப்பிரதேசத்தில் இடம்பெறும் இந்நிகழ்வு பிரதேச மக்களை மிகவும் உத்வேகமடைய வைத்துள்ளன. பிரதேச மக்கள் தாமாகவே இணைந்து அழகுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளை பிரதேச விளையாட்டுக்கழகமும் தனது முழுப் பங்களிப்பை செய்து வருகின்றன.

பிரதேசத்தை அழகுபடுத்தும் பணிக்கு, மாநகரசபை உறுப்பினர் ஜௌபர் இரவு பகல் பாராது பணியாளர்களுடன் இணைந்து செயற்படுவதை பிரதேச மக்கள் நன்றியுடன் நோக்குகின்றனர். இவர்களுடன் இணைந்து மாநகரசபையின் சாய்ந்தமருது பிரதேசத்துக்கான கழிவற்றும் பிரிவுக்கான பொறுப்பாளர் யூ.கே.காலித்தீன் விடயங்களை நெறிப்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -