ஹட்டன் கே.சுந்தரலிங்கம-
மலையகத்திலிருந்து பல்கழகம் செல்லும் எண்ணிக்;கையில் சற்று அதிகரித்த போதிலும் நாம் அது குறித்து திருப்தி அடைய முடியாது. இன்று இலங்கையிலுள்ள 16 பல்கலைகழகங்களுக்கு சுமார் 180.000 மாணவர்கள் பல்கலைகழக தகுதியினை பெறுகின்றனர். அதில் இந்த பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 30000 பேரை உள்வாங்குகின்றனர். அதில் இவ்வருடம் சுமார் 500 மாணவர்கள் மலையகப் பகுதியிலிருந்து சென்றுள்ளனர். இதில் அதிகரிப்பு காணப்பட்டாலும் நாம் திருப்தி அடைய முடியாது.காரணம் எமது மலையக சனத்தொகைக்கேற்ப சுமார் 2000 மாணவர்களாவது பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். என பேராசியரும் நன் நம்பிக்கை கல்வி நிதியத்தின் செலாளருமான ரி.தனராஜ் தெரிவித்தார்.

மலையகப்பகுதியில் தோட்டப்பகுதியிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பல்கலைகத்திற்கு தெரிவான நாப்பது மாணவர்களுக்கு புலமை பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு மலையகத்தில் உள்ள நன் நம்பிக்கை கல்வி நிதியத்தினால் இன்று ( 12) திகதி ஹட்டன் வெப்ஸட்டார், சர்வதேச பாடசாலையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவி;க்கையில் இன்று நாம் கல்வியில் ஒரு பின்னடைந்த சமூகமாக காணப்படுகின்றோம.; என்றால் சிலர் கோபப்படுகிறார்கள்.அப்படி சொல்லாதீர்கள். என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் உயர் பதவிகளில் எம்மில்
எத்தனை பேர் இருக்கிறார்கள். என்று தற்போது பல்கலைகழகம் தெரிவானவர்கள் அறிந்திருக்கு வேண்டும.; ஆரம்பத்தில் நாலு ஐந்து பேராசிரியர்கள் பல்கலைக்கழக பேராசியராக இருந்தனர்.
இன்று சுமார் 500 பேர் பேராசிரியர்களாக நாடு முழுவதும் இருக்கும் போது. எமது பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரே ஒருவர் மாத்திரமே இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல பேராதனை பல்கலைக்கழத்தின் விஜயசந்திரன் மட்டும் தான்.
ஆகவே நாட்டிலுள்ள நிர்வாகத்துறையினை எடுத்தாலும் சரி வெளிவிவகார துறைகளை எடுத்தாலும் சரி நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறோம். ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் எமது பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் வளந்து மற்றவர்களையும் முன் கொண்டு வர முயற்சிக்க வேண்டும.; இல்லா விட்டால் பின் தங்கிய சமூக நிலைமையினை மாற்றுவது கடினமாகி விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது சப்பிரகமுவ,மத்திய,ஊவா ஆகிய மாகாணங்களிலிருந்து மிகுவம் வறுமைக்கோட்டிக்கு கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு ஓரு மாணவனுக்கு ரூபா 25000 படி காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு தலைவர்,எஸ்.சபியா, செயலாளர் பேராசிரியர் ரி.தனராஜ்.பொருளாளர்,எஸ்.தாயுமாணவன்,உபதலைவர் பேராசிரியர் வாமதேவன்,உதவி செயலாளர் கே.மெய்யநாதன் உட்பட கல்வி மான்கள் அதிகர்கள் ஆசிரியர்கள் விரியுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.