மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்குபற்றிய மூன்று நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரில், "அமானியன்ஸ்" வெற்றிக் கிண்ணத்தை, 2000 ஆம் ஆண்டு அணியினர் சுவீகரித்துக் கொண்டனர்.
27 அணிகளுக்கு இடையில், கல்லொழுவை, நியூ வீதி, முனாஸ் ஹாஜியார் விளையாட்டுத் திடலில் இப்போட்டி நிகழ்வு இடம்பெற்றது. இறுதிப்போட்டி நிகழ்வில், 2010 ஆம் ஆண்டு அணியினரும், 2000 ஆம் ஆண்டு அணியினரும் மோதிக்கொண்டனர்.
இதில் 2000 ஆம் ஆண்டு அணியினர், "அமானியன்ஸ்" கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டு அணியினர் (Runners Up), இரண்டாம் இடத்தைப் பெற்ற நிலையில், அதற்கான கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டனர்.