கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் 2008 O/L Batch பழைய மாணவர்களது அயராத முயற்சியினால், பாடசாலையில் உள்ள சிறுவர் பூங்கா மீள்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்றைய தினம் (13) பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சிறுவர் பூங்கா மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களது நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர் பர்ஸான் அவர்கள், ஆசிரியை ரிஸ்னா அவர்கள் ஊடாக கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் 2008 O/L Batch மாணவர்கள் மேற்படி பணியை பொறுப்பேற்று பூரணப்படுத்தி பாடசாலையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீள்நிர்மாணம் செய்யப்பட்ட சிறுவர் பூங்காவினை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் தவ்ஸிர் அவர்களும், ஆசிரிய ஆலோசகர் ரிஸ்மி மற்றும் பாடசாலை அதிபர் பர்ஸான், ஆசிரியர்கள், மாணவர்கள், 2008 O/L Batch பழைய மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலை சார்பாக அதிபர் அவர்களால் குறித்த பழைய மாணவர்களுக்கு நன்றி நவிழல் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி சிறுவர் பூங்காவின் புனர் நிர்மாண பணிகளுக்காக ரூபா 60,000 அளவு 2008 O/L Batch பழைய மாணவர்களால் செலவிடப்பட்டுள்ளதுடன், அவர்களும் இரவு, பகல் பாராது பல்வேறு சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு பணியினை சிறப்பாக பூர்த்தி செய்ய ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.