2015 பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌வுக்கு வாக்களித்தனர். - உல‌மா க‌ட்சி


பொதுவாக‌ க‌ட‌ந்த‌ 2015 பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌ சார்பான‌வ‌ர்க‌ளுக்கு வாக்க‌ளிக்க‌வில்லை என்ற‌ தோற்ற‌ப்பாடு உள்ள‌மை பிழையான‌தாகும்.
இவ்வாறு சொல்ல‌ கார‌ண‌ம் இன்றைய‌ பாராளும‌ன்ற‌த்தில் ம‌ஹிந்த‌ சார்பு முஸ்லிம் க‌ட்சி உறுப்பின‌ர்க‌ள் எவ‌ரும் இல்லாமையாகும். இது முஸ்லிம்க‌ள் விட்ட‌ பெரும் த‌வ‌றாகும்.
அமைச்ச‌ர் ட‌க்ள‌சின் க‌ட்சி, தொண்ட‌மான் க‌ட்சி என்ப‌ன‌ க‌ட‌ந்த‌ 2015 தேர்த‌லின் போது upfaயுட‌ன் இணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு வாக்க‌ளித்த‌ த‌மிழ் ம‌க்க‌ளை நான் ம‌திக்கிறேன். இத‌ன் கார‌ண‌மாக‌ த‌மிழ் க‌ட்சிக‌ளும் ம‌ஹிந்த‌, கோட்டாவின் ப‌ங்காளி க‌ட்சிக‌ளாக‌ உள்ள‌ன‌ என்ப‌தை உல‌குக்கு காட்டியுள்ள‌து.
ம‌ஹிந்த‌ ப‌ற்றி த‌மிழ் க‌ட்சிக‌ள் ப‌ல‌ பொய்க‌ளை சொன்ன‌ போதும் சில‌ த‌மிழ் ம‌க்க‌ள் அத‌னை ஏற்க‌வில்லை என்ப‌தை தொண்ட‌மான், ட‌க்ல‌ஸ் வெற்றி காட்டுகிற‌து.
ஆனாலும் பிர‌ப‌ல‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் 2015ல் ஐ தே க‌வுட‌ன் இணைந்து செய‌ற்ப‌ட்ட‌ன‌. ஆனால் அதாவுள்ளாவின் க‌ட்சி upfaயுட‌ன் இணைந்து சுமார் 25000 முஸ்லிம் வாக்குக‌ளை பெற்ற‌து. அதே போல் ஹிஸ்புல்லாவும் சுமார் 30 ஆயிர‌ம் வாக்குக‌ளை பெற்றுக்கொடுத்தார். அதே போல் உல‌மா க‌ட்சி வேட்பாள‌ர்க‌ளை upfaயில் நிறுத்த‌ முய‌ற்சித்த‌ போதும், அத‌ற்குரிய‌ அனும‌தி கிடைத்த‌ போதும் க‌டைசி நேர‌ வெட்டுக்குத்து கார‌ண‌மாக‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைக்கவில்லை. இத‌னால் அம்பாரை த‌விர்ந்த‌ அன‌த்து ப‌குதிக‌ளிலும் upfaயுக்கு ஆத‌ர‌வாக‌ தேசிய‌ ரீதியில் பிர‌சார‌ம் செய்து க‌ணிச‌மான‌ வாக்குக‌ள் பெற‌ உத‌விய‌து.
மொத்த‌மாக‌ பார்த்தால் 2015 தேர்த‌லில் முஸ்லிம்க‌ள் சுமார் 1 ல‌ட்ச‌த்துக்கும் அதிக‌மானோர் upfaயுக்கு வாக்க‌ளித்த‌ன‌ர்.
அத்துட‌ன் ம‌ஸ்தான் போன்றோரின் வாக்குக‌ளும் upfaயுக்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆனாலும் அவ‌ர் முஸ்லிம் க‌ட்சி இல்லாத‌தால் அவ‌ர‌து வெற்றி ட‌க்ள‌ஸ், தொண்ட‌மானின் வெற்றி போன்று பார்க்க‌ப்ப‌ட‌வில்லை.

இத‌னால்த்தான் சொல்கிறோம் வ‌ட‌க்கு கிழ‌க்கில் முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌ சார்பு த‌னிக்க‌ட்சிக‌ளின் வேட்பாள‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும் என‌.

அந்த‌ தேர்த‌லில் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ளே இன்ன‌மும் பாராளும‌ன்ற‌த்தில் உள்ள‌ன‌ர். முஸ்லிம்க‌ளின் இந்த‌ மொத்த‌ வாக்குக‌ளை பார்க்கும் போது தொண்ட‌மான், ட‌க்ல‌ஸ் பெற்ற‌ த‌மிழ் வாக்குக‌ளுக்கு ச‌மீப‌மாக‌வே உள்ள‌து. ஆனாலும் முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌வுட‌ன் உள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் என்று வாக்க‌ளிக்காம‌ல் விட்ட‌தால் முஸ்லிம்க‌ள் upfaவுக்கு வாக்க‌ளிக்க‌வே இல்லை என்ற‌ தோற்ற‌ப்பாடு உள்ள‌து. அதையே இன்றைய‌ பாராளும‌ன்ற‌த்தில் பார்க்கிறோம்.
ஆக‌வே எதிர் வ‌ரும் பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் முஸ்லிம்க‌ள் குறிப்பாக‌ வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் இத்த‌வ‌றை மீண்டும் செய்ய‌க்கூடாது. முடிந்த‌ள‌வு பொதுஜ‌ன‌ பெர‌முன‌ சார்பு முஸ்லிம் க‌ட்சிக‌ளுக்கு வாக்க‌ளிப்ப‌த‌ன் மூல‌மே முஸ்லிம்க‌ளும் க‌ணிச‌மாக‌ வாக்க‌ளித்துள்ள‌ன‌ர் என்ப‌தை நிரூபிக்க‌ முடியும்.
முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
- உல‌மா க‌ட்சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -