ஐ.எல்.எம் நாஸிம்-
அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டியை ஸ்மாட் விளையாட்டு கழகம் (SSC) ஏற்பாடு செய்த கிரிக்கட் சுற்றுப்போட்டி 3 நாட்களாக சம்மாந்துறை பொதுமைதானத்தில் இடம் பெற்றது.
இன்று (12) இறுதி நிகழ்வாக சம்மாந்துறை மதீனா விளையாட்டு கழகத்திற்கும் IBM விளையாட்டு கழகத்திற்கும் இடையே விறு விறுப்பன சுற்றுப் போட்டி நடந்தது.இப் போட்டியில் IBM விளையாட்டு அணியினர் மதீனா அணியினரை வீழ்த்தி 2020 ஆண்டின் வெற்றிகேடயத்தை சம்மாந்துறை IBM அணி கைப்பற்றியது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் கௌரவ யு.எல் அஸ்பர் JP அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசு மற்றும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி கௌரவித்தார்.....
இவ் விளையாட்டு போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.