தென்கிழக்குப் பல்கலையில் 2020 கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு! (படங்கள்)

பல்கலைக்கழக ஊடக பிரிவு-

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய 2020 ஆம் ஆண்டின் அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2020.01-01 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக முற்றலில், உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

உபவேந்தரால் தேசியக் கொடி ஏற்றப்பட்ட அதேவேளை பதிவாளர், பல்கலைக்கழக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பதிவாளர் அல் ஹாஜ் எச்.அப்துல் சத்தார் அவர்களால் அரசாங்க சேவை சாத்தியப்பிரமாண உறுதிமொழி தமிழிலும் உதவி கணக்காய்வு உத்தியோகத்தர் செல்வி நிபுணி திஸாநாயக்கவால் சிங்களத்திலும் வாசிக்கப்பட்ட அதேவேளை அனைத்து உத்தியோகத்தர்களும் குறித்த உறுதிமொழியைக் கூறி கடமைகளை பொறுப்பேற்றனர்.
நாட்டுக்காக உயிர் நீத்த முப்படடையினருக்காக இரண்டு நிமிட மௌனம் அனுஷ்ட்டிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு உரையாற்றிய உபவேந்தர் நாஜீம், எங்களால் உறுதிகொள்ளப்பட்ட சாத்தியப்பிரமாணத்துக்கு அமைவாக எங்களது சேவையைப் பெறுவோர் பயனடைய வேண்டும் என்றும் அதற்காக நாங்கள் அனைவரும் தாங்கள் தங்களது கடமைகளை சரிவர ஆற்ற வேன்டும் என்றும் அதி மேண்மைக்குரிய ஜனாதிபதி அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய யுக்திகளுக்கு பல்கலைக்கழகங்கள் ஆற்றவேண்டிய பங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உச்ச அளவில் ஆற்ற அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின்போது நிதியாளர் பாஸிலுர் ரஹ்மான் நூலகர் எம்.எம்.றிபாயுடீன் பீடாதிபதிகள் திணைக்களங்களின் தலைவர்கள் சிரேஷ்ட்ட கனிஷ்ட்ட விரிவுரையாளர்கள் நிருவாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

புதுவருட நிகழ்வின்போது உபவேந்தர் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மாணவர்கள் என பலரும் தங்களது புதுவருட வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -