2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் கடமைகளை தொடங்கும் முதல் நாளான இன்றைய தினம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தில் காலடி வைக்கும் நிகழ்வு இன்று (01) புதன் கிழமை கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இன்று ஆரம்பமாகும் புத்தாண்டினுள் ஒரே நாட்டின், ஒரே இனத்தின், ஒரே கொடியின் நிழலில் ஐக்கியமாகவும், ஒரே மனப்பான்மையுடனும் மலர்ச்சியடைகின்ற பாதுகாப்பான தாய் நாட்டினுள் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கினை முன்னிறுத்தி ஒழுக்க விழுமியமிக்க, சட்டத்திற்கு அடிபணிகின்ற மற்றும் சிறந்த பண்புகளைக் கொண்ட சமூகத்தை உருவாக்குவதும், நிலைபேறான சுற்றாடல் முகாமைத்துவத்தை முன்னிலைப்படுத்தி பௌதீக வளங்களை விருத்தி செய்வதன் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை ஏற்படுத்துவதும் நவீன தொழில்நுட்பத் திறன் கொண்ட மனித வளத்தை வழிநடாத்தும் தூய்மையான அரச ஆளுகையின் பங்காளியான நாம் பொதுமக்களின் பணத்தில் சம்பளம் பெறுகின்ற அரசாங்க ஊழியனாக, அரசாங்க கொள்கைகள் மற்றும் நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு என்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற கடமைப் பொறுப்புகளை வினைத்திறனாகவும், பயன்மிக்கதாகவும், திடசங்கற்பத்துடனும், உயரிய அர்ப்பணிப்புடனும், நேர்மையாகவும், மக்களுக்கு பக்கச்சார்பின்றியும், நிறைவேற்றுவேன் என்று சத்தியப் பிரமாணம் செய்து கொள்கின்றோம் என உறுதி மொழியளிக்கின்றோம் என தெரிவித்தனர்.