தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 21 ஆவது வருடாந்த ஒன்றுகூடல் ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தலைமையில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட கேட்போர் மண்டபத்தில் 2019.12.31 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களும் கௌரவ அதிதியாக பதிவாளர் அல் ஹாஜ் அப்துல் சத்தார் அவர்களும் விஷேட அதிதியாக நிதியாளர் பாஸிலுர் ரஹ்மான் அவர்களும் பங்குகொண்டிருந்தனர்.
அதிதிகள் பங்குகொண்ட நிகழ்வு மற்றும் சங்க அங்கத்தினர்களுடனான நிகழ்வு என இரு அமர்வுகள் இடம்பெற்றன.
இதில் முதல்நிகழ்வின்போது பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி உயிர் நீத்த ஊழியர்களுக்காக இரண்டு நிமிட மௌண பிராத்தனை இடம்பெற்றன. பின்னர் தலைவர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து விபரித்து உரையாற்றினார். இங்கு பதிவாளர் அவர்களும் உபவேந்தர் அவர்களும் ஊழியர்கள் ஆற்றிவரும் பங்களிப்புக்கு நன்றிகூறி உரையாற்றியதுடன் சில முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றினர்.
இங்கு 21 ஆவது வருடாந்த ஒன்றுகூடலை முன்னிட்டு விசேட வேக் விநியோகிக்கும் நிகழ்வும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செய்திகளை பிரசுரித்த ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இரண்டாவது அமர்வின்போது 2020 க்கான நிருவாகிகள் தெரிவாக்கினர்: இதில்
தலைவர்: எம்.எம்.நௌபர்
உப தலைவர் :ஏ.எச்.சஹிருல் இம்தியாஸ்
செயலாளர்: ஏ.எம்.நஸ்வி
உபசெயலாளர்: எம் ஜி.ரொஷான்
உபசெயலாளர் பிரயோக விஞ்ஞான பீடம்: எம்.ஏ.றிபாயிஸ் முகம்மட்
பொருளாளர்:ஏ.எள்.எம்.ஹஸ்மிர்
நலன்புரி இணைச் செயலாளர் ஆண்: எம்.எம்.எம்.காமில்
நலன்புரி இணைச் செயலாளர் பெண்: உம்மு பரீதா முஸ்தபா
உள்ளக கணக்குப் பரிசோதகர்:எஸ்.எம்.றமீஸ் மௌலானா
பதிவாளர் பகுதி 1: எம்.ஆர்.எம்.றம்னாஸ்
பதிவாளர் பகுதி 2: ஏ.ஆர்.ஏ.ஷிஹான்
முகாமைத்துவ வர்த்தக பீடம் : எஸ்.றம்சீன்
கலை கலாச்சார பீடம் : வை.முபாறக்
அரபி மொழி பீடம் ;எம்.ஏ.எம்.ஹரீஸ்
பிரயோக விஞ்ஞான பீடம் :எம்.ரீ.ஹாசீர் முகம்மட்
தொழில்நுட்பவியல் பீடம் :எஸ்.றிபாயிதீன்
பொறியியல் பீடம் ;ஏ.ஆர்.ஹசீம்
சாரதிகள் பிரிவு : எம்.ஐ.நூருல் அமீன்
பிரதான நூலக பிரிவு : பி.எம்.ஹிதாயத்துல்லாஹ்
பாதுகாப்புப் பிரிவு :எஸ்.எம்.அஜீபர்
ஆய்வுகூட பிரிவு : ஏ.எல் .எம்.பைரோஜி
களஞ்சிய பிரிவு :எம்.எம்.எம்.றம்சீன்
பராமரிப்புப் பிரிவு :ஐ.எள்.எம்.தஸ்லிம்
கியரேட்டர் பிரிவு : எம்.ஐ.தாஹீர்
நலன்புரி உடற்கல்வி பிரிவு : பீ.ரீ.றாசீக்
வெளிவாரி கற்கைகள் பிரிவு: எம்.ரீ.எம்.தாஜூடீன்
ஆகியோர் தெரிவாக்கினர்.