சிங்களத் தீவை சீர் செய்ய ஜனாதிபதி அவதாரம் 2500 இரகசிய பொலிசார் களத்தில்


எம்.எம்.நிலாம்டீன்-

நாட்டில் உடனடியாக அமுலுக்கு வரும் சட்டங்கள்.
1. குடி போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழிய சிறை.
2. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வது முற்றாக இன்று முதல் தடை.
3.பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

4. பகிடிவதை செய்து சிக்கினால் 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்.
5. பாராளுமன்ற உறுப்பினர் 80% மேல் அமர்வுகளில் சமூகமளித்திருத்தல் வேண்டும் .தவறினால் 5 வருடங்களுக்கு எந்த வித வாக்கெடுப்பிற்கும் விண்ணப்பிக்க முடியாது.

6. அரச ஊழியர்கள் சேவை துஸ்பிரயோகம் செய்தால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

7. ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1% வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெருவாரேயானால் 1கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு தண்டப்பணமாக செழுத்த வேண்டும்.

8. அரசியல்வாதிகளின் சிபாரிசின் மூலம் வருபவர்களுக்கு வாழ் நாள் முழுதும் அரச சேவையில் இணையத்தடை.

9. வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் மருந்து வழங்கும் மருந்தகங்களில் அனுமதிப்பத்திரம் 48 மணித்தியாலத்திற்குள் ரத்து செய்யப்படும்.
10. சொத்துக்களை வாங்கி 5 வருடங்களுக்கு முன் விற்பனை செய்யப்பட்டால் விற்கப்படும் தொகையில் 50% வரியாக செழுத்தப்பட வேண்டும்.

11. மோட்டார் வாகன பொலிசார் இரகசிய பொலிசாரால் கண்காணிக்கப்படுவர்.சிக்கினால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம்.

12. தனியார் வைத்தியசாலைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிசார் அவதானிப்பர்.

இதிலுள்ள அனைத்தும் நாட்டிலுள்ள தப்பு செய்யும் அனைவருக்கும் ஆப்பு வைப்பதற்காக கொண்டு வரும் நல்ல திட்டம்..

ஆனால் கண்காணிக்கவன்று வரும் பொலிசாரைக் கண்காணிக்கிறது யாருங்க ஐயா !
கொஞ்சமாச்சும் நாடு ஒரு Systematic திட்டத்திக்குள் வந்திடும் போல எனக்கு தோணுது !

வடகிழக்கில் கடமையாற்றும் Traffic/ லஞ்ச ) போலிஸ் நாளந்த>வாராந்த > மாதாந்த சீட்டு பிடிப்பது இனிமேல் கோவிந்தா! கோவிந்தா! இனி ஆப்புத்தான் !.

ஆனாலும் கிழக்கில் முஸ்லிம் ஊருக்குள்தான் Traffic லஞ்சம் மிக அதிகமாக உள்ளது அதிலும் விசேடமாக அம்பாறை மாவட்டம்.அங்கு உழைப்பு அதிகம்.

இந்த மாதரி திட்டங்கள் அமுலுக்கு வர வேண்டும் ...
ஜனாதிபதி மக்கள் ஜனாதியாக அவதாரம் எடுத்து வருகின்றார் .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -