பாஜக ஐ.டி. விங்கின் போலி செய்தியை ஆதரமாக கொண்டு 300 இஸ்லாமியர்களின் வீடுகள் தரை மட்டம்: ஆவணங்கள் சோதனையில் இந்தியர்கள் என உறுதி!
சிஏஏ-வின் சட்டத்தின் அபாயத்தை உணர்த்தும் கர்நாடக பாஜக அரசின் நடவடிக்கை!
நாடு முழுவதும் மோடி அரசா
Add caption |
பெங்களூரில் உள்ள பெலந்தூர் ஏரி அருகே உள்ள வீடுகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது. இவர்கள் எல்லோரும் வங்கதேசத்தை சேர்ந்தவர். இங்கே முறையின்றி குடியேறி இருக்கிறார்கள் என்று சங்கிகளால் தொடர்ந்து கூறப்பட்டது. இதனால் இவர்களின் வீடுகளை இடித்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றியதாக பெங்களூர் போலீஸ் தரப்பு கூறுகிறது.
இந்த நிலையில் ஆவணங்களை பரிசோதனை செய்த அதிகாரிகள், அவர்கள் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர். தவறான தகவல் காரணமாக இப்படி நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வீடுகளை உடமைகளை இழந்த மக்கள் தற்போது இருப்பிடம் இன்றி அங்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரிடமும் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருந்துள்ளது.
"நாங்கள் இந்தியர் என்பதற்காக சகல ஆதாரமும் இருக்கிறது. ஆனால் எங்கள் வீடுகளை இடித்துள்ளனர். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. நாங்கள் எல்லோரும் கர்நாடக மக்கள். எங்களுக்கு வங்கதேசம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. சில வடஇந்தியர்களும் இங்கே இருக்கிறார்கள். அதோடு, தமிழகத்தை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் சிலரும் கூட இங்கே இருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய வீடுகளையும் இடித்து உள்ளனர்" என்கிறார்கள் வீட்டை இழந்த அப்பாவி மக்கள்.