இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு, மீடியா டிப்ஸ் 5ஆவது முறையாகவும்


#Media #Workshop #Free #News #MediaTips #JMmedia #Certificateமாவனல்லை (JM Media Production & College) ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் மற்றும் ஜே.எம் மீடியா ஊடகக் கல்லூரி இணைந்து ஐந்தாவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருக்கும் இலவச ஒரு நாள் ஊடக செயலமர்வு 2020 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவனல்லை கனேதன்னை புளுபில்ட் டீ மென்சன் (Blue Field Tea Mansion) மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஷித் மல்ஹர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த இலவசக் கருத்தரங்கு தேசிய புகழ் பெற்ற பல ஊடகவியளாலர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் தமிழ் பேசும் ஊடகர்கள், மாணவர்கள், ஊடக அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவர்கள், ஊடக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையங்களை செயற்படுத்துகின்றவர்கள் அனைவரும் வயதெல்லையின்றி இச்செயலமர்வில் பங்குபற்றி பயன்பெறலாம்.

பங்கு பற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்கு, ரஸா மல்ஹர்தீன் 0777 162 511
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -