சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் BA ஞாபகார்த்த ஜனாஸா மண்டபம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை, சம்மாந்துறை பிரதேச உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முஅல்லா மஹல்லா மையவாடி பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.