இன, மத குரோதம் நீங்கி, அமைதி, சுபீட்சம் மலரட்டும்; கல்முனை மாநகர மேயரின் புத்தாண்டு வாழ்த்து

அஸ்லம் எஸ்.மௌலானா-

பிறக்கும் புத்தாண்டு நாட்டில் இன, மத குரோதம் நீங்கி, அமைதி, சுபீட்சம் மலர்வதற்கு வழிவகுக்கட்டும் என்று கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"நிறைவடைகின்ற 2019ஆம் ஆண்டு பல துன்ப, துயரங்கள், சோதனைகளை கடந்து சென்றுள்ளது. இவ்வருடம் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதல்களினால் எமது நாடு நிலைகுலைந்து போனது. மக்கள் அச்சம், பீதியினால் துன்புற்றனர். அந்த சம்பவத்திற்காக முஸ்லிம்கள் பாரிய விலை கொடுக்க நேரிட்டது. அதனால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட சமூகமாக வஞ்சிக்கப்பட்டோம். அப்பழியில் இருந்து இன்னும் மீள முடியாமல் துவண்டு போயிருக்கிறோம்.

இந்நிலையில் பிறக்கும் புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரிடமும் இனவாதம், குரோதம், சந்தேகம், வெறுப்புணர்வு நீங்கி, அன்பு, கருணை, மனிதாபிமானம், சகிப்புத்தன்மை மேலோங்கி, ஐக்கியம், சகவாழ்வு, சமத்துவம் தழைத்தோங்கவும் நாட்டில் நிரந்தர அமைதி, சமாதானம் ஏற்பட்டு, அனைவரதும் எதிர்காலம் சுபீட்சம் நிறைந்ததாக அமைவதற்கும் பிரார்த்திப்போம்.

மேலும், நாட்டின் ஒருமைப்பாடு, அபிவிருத்தி, சுபீட்சத்திற்காக இன, மத வேறுபாடுகளைக் கடந்து, இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் கைகோர்த்து செயற்பட திடசங்கற்பம் பூணுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -