முனைமருதவன் எம்.எச்.எம்.இப்றாஹிம் எழுதிய ' நான் எய்த அம்புகள்' நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (11) சனிக்கிழமை இடம்பெற்றது.
நூலாசிரியர் முனைமருதவன் எச்.எம்.எம்.இப்றாஹிமின் துணிச்சலான அரசியல் விமர்சனங்களையும் நிகழ்வின் சிறப்பையும் பாராட்டி சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையிலான பொதுசசெயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதித் செயலாளர் எம்.எம்.ஜபீர், உயர்பீட உறுப்பினர்களான ஏ.எல்.நயீம். எம்.எம்.றின்சான், எஸ்.ஜனூஸ், வீ.எம்.பாசித் உள்ளிட்ட நிகழ்வின் அதிதிகள் புடைசூழ பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாச்சார பீட பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எம்.மையோன் முஸ்தபா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் சிராஜ் யூனூஸ், ஏற்றுமதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.அஷ்ரஃப் (தாஹிர்), அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எம்.அன்சில்;, சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக் உள்ளிட்ட கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.