காத்தான்குடி நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு உற்பத்தி மற்றும் உணவு கையாள்பவர்களுக்கான பயிற்சிப் பட்டறை காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (14) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இப் பயிற்சிப் பட்டறையில் மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டாளர் என்.தேவநேசன், உணவு கட்டுப்பாட்டு பிரிவு சுகாதார அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் திரு.எஸ்.நாகய்யா மற்றும் பிரதிப்பணிப்பாளர் எஸ்.டீ.அபூதாலி, ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரை வழங்கியதுடன் இப் பயிற்சிப்பட்டறை 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை மூன்று தினங்களில் இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸ்ருத்தீன் உள்ளிட்ட சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.