புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி தொடர்பில் திருகோணமலை மாவட்ட சமூக அடிப்படையிலான கிராம அபிவிருத்தி திட்டம் (சப்பிரிகமக்) கூட்டமானது வியாழக் கிழமை இன்று (09.01.2019) திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம் பெறவுள்ள நிலையில் தவிர்க்க முடியாததன் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இக்கூட்டமானது எதிர் வரும் திங்கட் கிழமை (2020.01.13) ந்திகதி அன்று காலை 10.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (09)நாடாளுமன்ற அமர்வு காரணமாக இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது
இதில் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலம மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல் பிரமுகர்கள்,உள்ளூராட்சிமன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.