2020ம் ஆண்டு புதுவருடப் பிறப்பின் முதல்நாள் விஷேட நிகழ்வு சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் (01) புதன்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவருமான எம்.எஸ்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற அவரது முதல்வர் எம்.எம்.எம்.முஸ்தாக் உள்ளிட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு புதுவருடத்தில் எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொருட்களையும் சேவைகளையும் வழங்குவது, பணியாற்றுவது, வாடிக்கையாளர்களை எவ்வாறு கவர்வது, பேசுவது மற்றும் வியாபார உக்திகள் தொடர்பாக நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.முபாறக் விளக்கமளித்தார்.
நிறுவனத்தின் ஊழியர்களுக்கு புதுவருட பரிசில்களை முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவருமான எம்.எஸ்.எம்.முபாறக் மற்றும் அவரது முதல்வர் எம்.எம்.எம்.முஸ்தாக் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.