அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கடந்தாண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு பணப் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
வங்கி முகாமையாளர் எம்.ஐ.எகியா தலைமையில் i(21) இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட உதவிப் பிராந்திய முகாமையாளர் என்.அருள் செல்வம், பிரதி முகாமையாளர் எஸ்.எம்.ஏ.ஜவாத் மற்றும் வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபில் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளில் கல்வி பயின்று கடந்தாண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கே இந்த பணப் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.