2020 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று நாடு பூராவும் நடைபெறுகிறது. அதன் ஒரு கட்டமாக சாய்ந்தமருது கமு /அல்- ஹிலால் வித்தியாலய வித்தியாரம்ப விழா இன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக கணக்கியல் துறை பீட தலைவர் பேராசியர் எ. ஜௌபர், கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியலாளர் ஏ.எம். சாஹீர், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் எ.எல்.எம். நஜிமுடீன், பொறியியலாளர் கமால் நிசாத், கணக்காளர் எ. அன்சார், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
சாய்ந்தமருது கோட்டத்தின் மற்றுமொரு பாடசாலையான கமு / லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் வித்தியாரம்ப நிகழ்வும் இன்று காலை அப்பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெற்றது.