மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் கோரிக்கை.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- மலையக மக்கள் முன்னணியில் பிரதி செயலாளராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கும் அனுசியா சந்திரசேகரன். இன்று கட்சில் எவ்வித ஆலோசனைகளும் இன்றி, தான.; பாராளுமன்ற தேர்லில் போட்டியிடப்போவதாக அறிவித்து வருகிறார். கட்சியின் ஸ்தாபகர் சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளர் என்ற வகையிலும்,அவரை இப்பதவிகளுக்கு கொண்டு வருவதற்கு நெருங்கிய தொடர்பட்டவன். என்ற வகையிலும், அவர் பாராளுமன்றத்திற்கு ஆசைப்பட்டு மலையக மக்கள் முன்னணியினை சிதைத்து விட கூடாது. என கோரிக்கை விடுப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் கவுன்சில் உறுப்பினருமாகிய புஸ்பா விஸ்வநாதன் இன்று (17) கொட்டகலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் நிலை தொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் சந்திரசேகரனின் மறைவின் பின,; சாந்தினி சந்திரசேகரன் அவர்கள் தீவிர அரசியல் செயல்பட ஈடுபாடு இல்லாததன் காரணமாக, நாங்கள் சட்டத்தரணியாக இருந்து அனுசியா சந்திரசேகரன் அவர்ககளை மலையக மக்கள் முன்னணியினை கட்டியெழுப்புவதற்கு கவுன்சில் உறுப்பினராகவும்,மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளராகவும் நியமனம் செய்தோம்.கட்சியின் செயலாளர் திரு லோரன்ஸ் அவர்கள் கட்சி செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவருக்கு செயலாளர் பதவி கிடைக்கும்.
இன்று மலையக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, தமிழ் முற்போக்கு கூடடணியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளது.இதில் மலையக மக்கள் முன்னணி சார்ப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கட்சியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவர்களும், பதுளையில் அரசியல் துறை தலைவர் அரவிந்தகுமார் அவர்களும், போட்டியிடுவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.எனவே அடுத்து வரும் பொதுத்தேர்தலில் இராதாகிருஸணன் பொதுத்தேர்தலில் அனுசியா சந்திரசேகரனுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்குவதாகவும், எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் இவரை முதன்மை வேட்பாளராக கொண்டு செயப்படவும் கட்சி தீர்மானித்திருக்கின்ற நிலையில், அவர் அவசர அவசரமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறித்துள்ளார்.இது கட்சியின் ஒற்றுமையினை சீர் குலைப்பதோடு பல விரிசல்களையும் ஏற்படுத்தியுள்ளன.
ஆகவே இவர் எவருடனும் கூட்டுச் சேர்ந்து கட்சியினை இரண்டு பட செய்யக்கூடாது. அதே தனது அரசியல் எதிர்காலத்தினை இல்லாமல் செய்து கொள்ள முயற்சிக்கக் கூடாது. அவர் எப்போதும் மலையக மக்கள் முன்னணியுடனேயே போட்டியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.