ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கேற்ப வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய , கல்முனை பகுதியில் ஏ.ஆர் .மன்சூர் பவுண்டேஷன் அமைப்பினரால் வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் வேலைத்திட்டம்
அமைப்பின் ஸ்தாபகர் சட்டத்தரணி
மர்யம் நளீம்டீன் வழிகாட்டிடலில்
இன்று (09) கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கட்டிடமொன்றின் சுவரில் சூழலை பாதிப்படைய செய்யும் விடயங்கள் மற்றும் போதைபொருள் பாவனை ஒழிப்பு பற்றி பொது மக்களுக்கு விழிப்புட்டும் வகையில் இவ் சுவர் ஓவியம் வரையப்படுகின்றது .
மேலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் முதன் முறையாக இவ் வெற்றுச்சுவர்களை அலங்கரிக்கும் திட்டம் இவ் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.