நாட்டிக்கு ஓர் தைரியமான நேர்மையான தலைமைத்துவம் கிடைத்துள்ளது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவியும் பாரளுமன்ற உறுப்பினருமான சிறியானி விஜயவிக்ரம


எம்.என்.எம்.அப்ராஸ்-
மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் உறுப்பினர்களுக்கான அடையாளஅட்டை மற்றும் நியமனப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் மாளிகைக்காடு அல்ஹுசைன் வித்தியாலத்தில் காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் கடந்த சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவியும் பாரளுமன்ற உறுப்பினருமான சிறியானி விஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

நாட்டிக்கு ஓர் தைரியமான நேர்மையான தலைமைத்துவம் கிடைத்துள்ளது எமது நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல கூடியுவர்களுடன் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணக்க வேண்டிய தருணமாகும் உண்மையில் எமது எதிர்காலத்தை சிந்திக்க வேண்டியுள்ளது .

எங்களுடைய நாடு அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்வதனால் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நாங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.சிங்கள,தமிழ் , முஸ்லிம் மக்கள் அனைவரும் அரவணைத்து செல்லக்கூடிய ஓர் தலைமைத்தும் எமக்குகிடைத்துள்ளது.

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்ககளை
நான் செய்துள்ளேன்.

தற்போது ஒவ்வொரு கிரமா சேவகர் பிரிவுகளை அபிவிருத்தி செய்ய முதற்கட்டமாக இரண்டு
மில்லியன் ரூபா அரசங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இதன் மூலம் எமது பகுதியை அபிவிருத்தி செய்யமுடியும்.


மேலும் பெண்கள் உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பாரளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்து வந்துள்ளேன்.
பெண்களின் முன்னேற்றம் பாதுகாப்பை உறுதிப்படுத்த என்றும் உறுதுணையாக இருப்பேன்.

காரைதீவு பிரதேசத்திற்கு எமதுகட்சிக்கு பிரதிநிதிதுவத்தை பெற்று தந்ததுக்கு இவ்விடத்தில் நன்றியை
தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும் இதில் மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி
பிரதேசங்களை சேர்ந்த சுமார் 500 இற்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவியுமான சட்டத்தரணி ஸ்ரீயாணி விஜயவிக்ரமவிடமிருந்து முன்னிலையில்
அதற்கான கட்சி அங்கத்துவ அட்டையைப் பெற்று இணைந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -