தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

ழவர்கள் தமது உழவுத் தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டுவரும் தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பல இன, மத, கலாச்சார சமூகத்தைக் கொண்ட இலங்கை நாட்டின் கலாச்சார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்பதே தனது நம்பிக்கை.

இத்தத்தையோர் உன்னதமான பண்டிகையை, உழவர்களின் பூமியான வரலாற்று இராசதானிகள் நான்கினைக் கொண்ட குருணாகல் மாவட்டம் உள்ளடங்கலான வடமேல் மாகாண மக்களுடன் கொண்டாடக் கிடைத்தமையே நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

இலங்கையைச் செயல்திறன் மிக்க நாடாக மாற்றியமைக்கும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எண்ணக்கருவுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், எழில்மிகு வடமேல் மாகாணத்தை உருவாக்குவதற்கு அனைத்து மக்களுடன், நாமும் ஜனாதிபதி அவர்களுடன் ஒன்றிணைகின்றோம்.

விவசாய நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து, மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

ஏ.ஜே.எம். முஸம்மில்
வடமேல் மாகாண ஆளுநர்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -