அறிவிப்பாளர்ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் திடீர் மறைவு ஊடகத்துறைக்குபேரிழப்பாகும் - சிலோன் மீடியா போரம்


ஷய்பான் அப்துல்லாஹ்-
றிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி தனது குரலால் எல்லோரையும் வசியம் செய்த சிரேஷ்ட ஊடகவியலாளர். அவரின் திடீர் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் என சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரின் திடீர் மறைவு ஊடகவியலாளர்களை கவலையடைய வைத்துள்ளது.

பாடசாலைகள் மட்டத்தில் மாணவர்களின் பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியினை வானொலி ஊடாக தனது அறிவுத் திறன் மற்றும் குரல் வளம் என்பவற்றின் மூலம் நடாத்தி அறிவுக் களஞ்சியம் புகழ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி என நாடே போற்றுமளவுக்கு புகழடைந்த சிறந்த ஊடகவியலாளராவார்.

தனது ஊடக அனுபவங்களை வளர்ந்து வரும் ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக பல்வேறு ஊடக செயலமர்வுகளை நடாத்திய ஊடக கனவான். அறிவிப்புத் துறைக்குள் வரவிருப்பவர்களின் உதாரண புருஷராக அவர் இன்றும் பார்க்கப்படுகின்றார் என்றால் அது மிகையாது.

நாட்டின் பல பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றி கல்வித்துறையிலும் அவர் தனித்துவமான முத்திரையினை பதித்துள்ளார்.

அன்னாரின் மறைவால் துயருட்டிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திக்கின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -