'பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வலுவூட்டல்' கருத்தரங்கு

அஸ்லம் எஸ்.மௌலானா-
எம்.எப்.சி.டி. நிறுவனத்தின் உதவி பெறுகின்ற, தகப்பனை இழந்த பிள்ளைகளின் தாய்மார்களுக்கான வருடாந்த விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் சாய்ந்தமருது பேர்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

'பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வலுவூட்டல்' எனும் தொனிப்பொருளில் எம்.எப்.சி.டி. அம்பாரை மாவட்ட பிராந்திய திட்ட முகாமையாளர் எஸ்.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இப்றாஹிம் சப்றி சிறப்புரையாற்றியதுடன் கல்முனை பிரதேச செயலக உளவளத்துணை ஆலோசகர் ஏ.ஆர்.தஹ்லான் வளவாளராக கலந்து கொண்டு விழிப்பூட்டல் கருத்துரை வழங்கினார்.

இதில் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, மாவடிப்பள்ளி மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை சேர்ந்த அனாதைப் பிள்ளைகளின் தாய்மார்கள் மற்றும் பாதுகாவலர்கள் பங்கேற்றிருந்தனர்.

இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் அனுசரணையுடன் எம்.எப்.சி.டி. நடைமுறைப்படுத்தும் அனாதைச் சிறுவர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 1200 அனாதைப் பிள்ளைகள் பயன்பெற்று வருகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -