வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுக்கூட்டம் கடந்த 07.01.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் Dr எறங்க ராஜபக்ஷ (Dr. Eranga Rajapakshe) தலைமையில் வைத்திசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக்குறைகளால் வைத்தியசாலை எதிர்நோக்கும் வெளிநோயாளர் பிரிவு உட்பட முக்கிய பிரிவுகள் ஒரு சில தினங்கள் மூடப்படல், அதன் காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் வைத்தியர்கள் நியமனம் மற்றும் ஏனைய ஆளணிகளைப் பெற்றுக்கொள்வதில் உரிய தரப்பை அணுகி பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது.
அத்தோடு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இம்மாதம் கடைசி பகுதியில் மேற்கொள்ளவுள்ள நிலையில், அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பேரில் வைத்தியசாலையின் தற்போதைய நிலைப்பாட்டை ஆளுநருக்கு எடுத்துரைக்க அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.