இன்று தவப்பிரியா தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை!


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் இஸ்ஸதீன் தெரிவிப்பு. 
 காரைதீவு நிருபர் சகா-
நிந்தவூரில் முதலாந்திகதியன்று ஜனாதிபதியின் அரசஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை இன்று வியாழன்(9) நடைபெறும்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இஸதீன் லத்தீப் இத்தகவலைத் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்கல்முனைப்பிராந்திய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும்இவ்விசாரணைக்கு தாக்குதல் நடாத்திய நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக் அழைக்கப்பட்டுள்ளார்.
அவரின் தலைமை அதிகாரியான அம்பாறை மாவட்ட கமநலசேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் கல்முனைப்பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரிஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -