தேசிய பொங்கல் தேவையற்ற செலவாகிவிட்ட நிலையில் தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவது சவாலானதே - திலகர் எம்பி


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் தேசிய தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடவில்லை என ராஜாங்க அமைச்சர் கூறியிருப்பது நாட்டின் பொருளாதார மந்த நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த நிலையில் தைப்பிறந்தால் வழிபிறக்கும் எனும் காலங்காலமான நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்துவதோடு தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவதே சவாலான ஒன்றாகிவிட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் தமிழர் திருநாள். அது ஒரு மதம் சார்ந்த கொண்டாட்டமல்ல. தமிழர் வாழ்வியலோடு கலந்த ஒரு பண்டிகை. விவசாயத்தை கௌரவிக்கும் வகையிலும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் இந்த பாரம்பரிய பண்டிகை மதங்களைக் கடந்தும் கொண்டாடப்படுகின்றது, இத்தகைய சிறப்புமிக்க தைப்பொங்கல் பண்டிகை கடந்த காலங்களில் இலங்கையில் தேசிய பண்டிகையாக கொண்டாடப்பட்டது. நாட்டின்இருத்துநான்கு மாவட்டங்களையும் ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட நிகழ்வுகள் மூலம் தைப் பொங்கலின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டதோடு இன, மத நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதாகவும் அமைந்தது.

எனினும், இந்த 2020 தைப்பொங்கலை தேசிய தைப்பொங்கல் தினமாகக் கொண்டாடுவது தேவையற்ற செலவு என்றும் எனவே அதனை சிறு அளவில் கொண்டாடவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தைப்பொங்கலின் முக்கியத்துவத்தை உணராத ஒன்றாகவும் செலவுகளை சமாளிக்க இவ்வாறு அரசாங்கமே பண்டிகையைச் சுருக்குவதானது நாட்டில் விலைவாசி உயர்வின் வெளிப்பாடாகவும் கொள்ள வேண்டியுள்ளது. எனவே தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தமிழர்கள் தமது பாரம்பரிய பண்டிகையை கொண்டாடுவது சவாலானதாகவே அமைந்துள்ளது. “தைபிறந்தால் வழி பிறக்கும்” எனும் காலங்காலமான நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும் இத்தகைய சவால்களை எதிர்கொண்டே முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -