எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் இவ்வருட கல்வியாண்டிற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சனிக்கிழமை (11) நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குறித்த கல்லூரில் கிதாபு மற்றும் குர்ஆன் மனனப் பிரிவுகளில் இணைந்து கல்வி கற்க அறுபத்தைந்து மாணவர்கள் இணைந்துள்ளனர்.
இந்நிகழ்வில் புதிய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி சிறப்புரை ஒன்றினை நிகழ்த்தினார். அத்தோடு பெற்றோர் சார்பாக இஸ்லாமிய அழைப்பாளரும் உளவள ஆலோசகருமான எஸ்.எம்.அப்துல் ஹமீட் ஷரஈ பெற்றோர்கள் அனைவரும் கல்லூரியின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்கள் கல்லூரியின் சட்டதிட்டங்கள், ஒழுங்குகள் போன்றவைகள் பற்றி விளக்கமளித்தார்.