உயர்கல்விக்கான இலவச வழிகாட்டல் ஆலோசனைக் கருத்தரங்கில் பங்குபற்றிப் பயன்பெறுமாறு உயர்தர மாணவர்களுக்கு ஐக்கிய ஸாஹிரியன் நட்புறவு அமைப்பு (உஸ்பா) அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த வருடமும்; அதற்கு முன்னைய வருடங்களிலும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீ;ட்சைக்குத் தோற்றிய மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கருத்தரங்கு 15.01.2020ஆம் திகதி புதன் கிழமை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் காரியப்பர் கேட்போர் கூடத்தில் காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. சிப்லி, ஹாடி தொழில்நுட்ப் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் முகாமைத்துவ பிரிவுத் தலைவர் எஸ். தௌபீக் அஹமட், அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஏ. றமீஸ் மற்றும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம். மஹ்சூம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து வழிகாட்டல் ஆலோசனை வழங்கவுள்ள முற்றிலும் இலவசமான இக்கருத்தரங்கில் பங்குபற்றி பயன்பெறுமாறு உயர்தர மாணவர்களுக்கு ஐக்கிய ஸாஹிரியன் நட்புறவு அமைப்பு (உஸ்பா) அழைப்பு விடுத்துள்ளது