இலங்கை சுப்ரீம் கவுன்சில் சுபீ தரிக்கா அமைப்பினா்களது ஏற்பாட்டில் தேசிய ஜக்கியம் சகோதரத்துவம் சமாதானத்திற்கான நபி பெருமானாா் முகம்மத் (ஸல்) அவா்களின் வாழ்க்கை வழி முறைகள் என்ற தலைப்பில் இவ் சர்வதேச மாநாடு நேற்று( 11) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு வெளிநாடுகளில் இருந்து அரபு இஸ்லாமிய புத்திஜீவிகள் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், லண்டன். கட்டாா். துபாய், பங்களதேஸ் போன்ற நாடுகளில் இருந்து பல உலமாக்களும் கலந்து கொண்டனா். இலங்கை நாட்டின் பிரதமா் ஜனாதிபதி ஆகியோா் இம் மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்காக தமது அனுமதிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ் வெளிநாட்டு புத்திஜீவிகளை பிரதமா் மகிந்த ராஜபக்ச அவா்களின் அலுவலகத்தில் சென்று சந்தித்தனா் .ஆசிர்வாதமும் வழங்கினாா்கள்.
இந் நிகழ்வில் கட்டாா் நாட்டின் கமீட் பின் கலிபா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராகக“ கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சோ்ந்த பேராசிரியா் தீன் முகம்மத், லண்டன், ஸ்கொட்லாந்து நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளா் சேக் அப்துல் அசீஸ் அகமட் டேவிட், ஜரோப்பிய நாடுகளின் இஸ்லாமிய புத்தீஜீவி சேக் மொகமட் அஸ்லம், மற்றும் நபி (ஸல்) அவா்களின் 33 வழித் தோன்றலில் உள்ள சேக் அஸ் செய்யத் அபிதுான் ஜீலானி தற்பொழுது மலேசியாவில் தங்கியிருந்து ஆயிரக் கணக்கான மாணவா்களுக்கு இஸ்லாமிய கற்கைநெறிகள் போதனைகள் போதித்து வருபவா். கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.
இலங்கை நாட்டின் வாழும் மக்களுடன் முஸ்லிம்கள் ,இன ஜக்கியம் ,சகோதரத்துவம். ஏனைய மதங்களுடனான எவ்வாறு ஜக்கியமாகவும் வாழ்வது ? நபி முகம்மத் (ஸல்) அவா்கள் நமக்கு வாழ்ந்து காட்டிய வாழக்கை முறை, சர்வமத ஏழைகளுககு உதபுவது , நமது ஸக்காத் நன்கொடை நிதியை அன்னியவா்களுக்கும் உதவும் முறைகள் , இஸ்லாம் என்றால் இஸ்லாமிய அரசியலும், யுத்தங்களுமே எமக்கு பாடசாலை காலத்தில் தமது வரலாறுகளை கற்கின்றோம். அதனை விடுத்து பல்வேறு நல்ல வாழ்க்கை முறைகள், ஆன்மீகம் நபி ஸல் நேரடி அன்பு நேரடி உள்ளத்தில் இருந்து ஏற்படுதல், போன்ற தலைப்புக்களில் அங்கு வருகை தந்த புத்திஜீவிகளினால் உரையாற்றப்பட்டனா்.
நாட்டில் நாலா பாகத்தில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். எதிா்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பிணா்கள் ஏ.எச்.எம் பௌசி, அலி சாகிா் மௌலானா, பைசா் முஸ்தபா, எஸ்.எம். மரிக்காா், ஜனாதிபதி சட்டத்தரணி, பாயிஸ் முஸ்தபா, அலி சப்ரி, கொழும்பு பிரதி முதல்வா் மொகமட் இக்பால்,. முன்னாள் ஆளுனா் அசாத்சாலி, முன் ஆசனங்களில் அமா்ந்திருந்தனா்.
அத்துடன் வெளிநாட்டு அதிதிகளுக்கு சர்வமதங்கள் கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவா் அஸ் ஸெய்யத் கசன் மௌலானா, நகீப் மொலானா ஆகியோா் பிரதமா் சாா்பில் வெளிநாட்டு அதிதிகளை பொன்னாடை போற்றி கௌரவித்தனா்.