ஐ. ஏ. காதிர் கான்-

சுற்றுலா பஸ்களுக்காகப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள குத்தகைக்கான (Leasing) தவணைக் கொடுப்பனவைச் செலுத்துவதற்காக நிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது
.
நிதி அமைச்சுடன் இணைந்து இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று, முதலீட்டு மேம்பாட்டு சுற்றுலா விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளை வழங்குவதற்காக 700 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 95 சதவீதமானவை தனியார் தொழில்துறையினருக்கு உட்பட்டதாகும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் சுற்றுலாத் தொழில்துறைக்குப் பெரும் தாக்கம் ஏற்பட்டதுடன், இத்துறையில் ஈடுபட்டிருந்த பஸ் உரிமையளர்களுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குத்தகைத் தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் சில பஸ்கள் குத்தகை நிறுவனங்களினால் பொறுப்பேற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், தமக்கு நிவாரண காலமொன்றை வழங்குமாறு இத்துறையைச் சேர்ந்தோர் கடந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என இந்த பஸ் உரிமையாளர்கள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் தெரிவித்திருந்தனர். 

இதற்கு அமைவாகவே, இந்த குத்தகைக்கான தவணைப் பணத்தைச் செலுத்துவதற்கு நிவாரண காலமென்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -