தவப்பிரியாவைத்தாக்கிய உத்தியோகத்தர் தலைமறைவு:


பொலிசார் சல்லடைபோட்டு தேடுதல்:கொழும்பில் எனதகவல்!
காரைதீவு நிருபர் சகா-
நிந்தவூரில் பெண்ஊழியர் தவப்பிரியாவைத் தாக்கிய உத்தியோகத்தரைத்தேடி சம்மாந்துறைப்பொலிசார் வலை விரித்துள்ளனர்.
பெண்ஊழியர் தவப்பிரியா செய்த முறைப்பாட்டின்பேரிலும் இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு விடுத்த உத்தரவின்பேரிலும் அவரைக்கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி ஜயலத் இதற்கென விசேட பொலிஸ் குழுவினரை நிந்தவூருக்கு அனுப்பி அவரது வீட்டை சோதனையிட்டார். வீடு பூட்டிக்கிடந்தது. அவர் அங்கில்லையெனத் தெரியவந்தது.

அதனையடுத்து அவரது உறவினரான அரசியல்வாதியொருவரின் வீட்டுக்கும் பொலிசார் சென்றுள்ளனர். அங்கும் அவர் இருக்கவில்லை;
அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி அவர் கொழும்புக்குச் சென்றிருக்கலாமென நம்பப்படுகிறது.

எனுஎப்படியிருப்பினும் மிகவிரைவில் நாம் அவரைக்கைது செய்வோம் என பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி ஜயலத் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர்இஸதீனிடமும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலிடமும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -