எம்.என்.எம்.அப்ராஸ்-
க.பொ.த உயர் தர பெறுபேறுகளை பெற்ற மற்றும் க.பொ.த சாதாரண பரீட்சை முடித்த இளைஞர் யுவதிகளுக்காக சிம்ஸ் கேம்பஸ்( CIMS CAMPUS) கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா இணைந்து நடாத்திய "இலவச தலைமைத்துவ மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் செயலமர்வு இன்று
ஞாயிற்றுக்கிழமை (12) காலை
சிம்ஸ் கேம்பஸ் (CIMS CAMPUS) முஸ்தபா கேட்போர் அரங்கத்தில்
கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக சிம்ஸ் கேம்பஸ்
தவிசாளரும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் துதுவருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா கலந்து கொண்டு மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறான துறைகளை தெரிவு செய்வதன் மூலம் இலகுவாக எவ்வாறான தொழில் வகைகளை தெரிவு செய்ய முடியும் என்பது பற்றி விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் சுமார் 300 இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.