கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதை பிறப்பிடமாகக் கொண்ட மறைந்த இலங்கை ஒளிபரப்பு கூட்டுதாபன மூத்த அறிவிப்பாளரும், ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மரணத்தையிட்டு அனுதாபச் செய்தியொன்றினை
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளையின் செயலாளர் ஏ.எம்.ரஹிம் ஆசிரியர் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ப அனுதாப செய்தியில் தேசம் எங்கும் ஒலித்த அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம.ஜிப்ரி புகழ் பெற்ற அறிவிப்பாளரும் இளம் ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கிய அன்னாரின் மறைவு சமூகத்திற்கும் கல்வி துறைக்கும் ஊடக துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.
அன்னாரை காந்த குரலோன் என அழைக்கும் இவரை வானொலி துறையில் ஒலிபரப்பிய அறிவுக் களஞ்சியம் ,அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம் போனற கல்வி துறைசார் புகழ் பெற்ற மாமேதை ஆவார்.
அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் அன்னாரது பிரிந்து வாழும் இக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரது மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற இச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அன்னாருக்கு ‘ஜென்னத்துல் பிர்தௌஸ்’ என்னும் சுவனத்தை அடைய அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றனர்