கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் புது வருட சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (01) புதன்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வைத்திய கலாநிதி சுகுணன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தனைத் தொடர்ந்து படை வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சகலரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதியின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' என்ற தொனிப்பொருளில் அமைந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய தற்போதைய மற்றும் எதிர்கால சந்தததியினரின் நலன்கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றத்தக்க மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளும் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான பத்து வாக்குறுதிகள் அடங்கிய சத்தியப் பிரமாணத்தை இதன்போது அனைத்து ஊழியர்களும் மேற்கொண்டனர்.