சஜித் பிரேமதாச மூன்று கோடி ருபாவுக்கும் மேற்பட்ட அரச நிதி வீனாக செலவு செய்துள்ளார்



அஸ்ரப் ஏ சமத்-
முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச நிதியில் இலட்சக் கணக்கான போஸ்டா்கள், அழைப்பிதழ்கள் , வீடமைப்புக் கிராமங்கள் பற்றிய கையேடுகள் அச்சடிக்கப்பட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதிகளை வீனாக செலவழித்துள்ளாா். அவாின் ஆலோசனையின் பேரில் அதிகார சபையின் முன்னாள் தலைவா் அனுமதியின் கீழ் அச்சடித்த போஸ்டா்கள் இலட்சக் கணக்கில் அதிகார சபையின் கீழ் தள மாடியில் இன்னும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் வீடமைப்பு ஊழியா்களுக்கு வீடமைப்புக் கடன், மருத்துவ கொடுப்பணவுகள். சம்பளம் வழங்கமுடியாத நிலைக்கு அதிகார சபை நிதியின்மைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேற்படி விடயமாக இன்று (17) வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளா் திரு. சுதத் ஊடகவியலாளா்களை அழைத்து தேங்கிக் கிடக்கும் போஸ்டா்களை காண்பித்து கருத்து தெரிவிக்கையில்
முன்னாள் அமைச்சா் சஜித் பிரேமதாச வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த 5 வருட காலத்திற்குள் 5200 வீகளையே நாடு முழுவதிலும் நிர்மாணித்துள்ளாா். ஆனால் ஒரு வீடமைப்புக் கிராமத்தில் 7 அல்லது 25 வீடுகள் கொண்டதொரு வீடமைப்புக் கிராமத்திற்கு வீடுகள் நிர்மாணிக்க 10 மில்லியன் ருபாவினை செலவாகியுள்ளது ஆனால் விளம்பரத்திற்கும் , போஸ்டா், கையேடுகளுக்கு பதாதைகளுக்கு 5 மில்லியன் ருபா செலவளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிகழ்வுகள் முன்னாள் அமைச்சரினால் பிட்போடப்பட்டால் விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட 5 மில்லியன் ருபா நிதி வீனாகியுள்ளது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் தள மாடியில் தேங்கிக் கிடக்கும் போஸ்டா்கள், கையேடுகள், அழைப்பிதழ்கள் மூன்று கோடி ருபாவுக்கும் மேற்பட்ட அரச நிதி வீனாக தனியாா் அச்சகத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா் நிர்மாணித்த 150 கிராமத்திற்கும் 5200 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன ஆனால் விளம்பரத்திற்குள் செலவழித்துள்ள நிதி ஏழை மக்களுக்கு மேலும் 6000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுத்திருக்க முடியும். கம்பாந்தோட்டையில் நிர்மாணித்ததொரு வீடமைப்புக்கிராமம் திறப்பதறகு முன் அக்கிராமம் பற்றிய போஸ்டா்கள் பாதைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட 25 ஆயிரம் போஸ்டா்கள் 24 மாவட்டத்திலும் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக ஊழியா்கள், அரச வாகானங்கள் பாவிக்க்பட்டுள்ளன. என தேகிய வீடமைப்ப்பு அதிகார சபையின் புதிய பணிப்பாளா் சுதத் மேற்கண்ட தகவல்களை ஊடகவியாளா் மத்தியில் தெரிவித்தாா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -