மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா லக்கம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று (13) பகல் 12.45 மணியளவில் வீதியை விட்டு விலகி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்:து முச்சக்கரவண்டி செலுத்த பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது கட்:டுப்பாட்டை இழந்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.