பாவனைக்குப் பொருத்தமற்ற இ.போ.ச. பஸ்களை அகற்ற நடவடிக்கை

ஐ. ஏ. காதிர் கான்-

போக்குவரத்துச் சேவைகளுக்குப் பொருத்தமற்ற அனைத்து பயணிகள் பஸ் வண்டிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, மலை நாட்டுப் பகுதியில் பயணிக்கும் பழைய பஸ் வண்டிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இ.போ.ச. தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ் வண்டிகளும், கடந்த வாரம் முதல் பழுது பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும், நல்ல நிலையிலுள்ள பஸ் வண்டிகள் திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பசறை, மடுல்சீமை பிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் வண்டியொன்று வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் காயமடைந்த சம்பவத்திற்கு இதுவும் ஒரு காரணமாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு முற்பட்ட 1,000 பஸ் வண்டிகள் இயங்குவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -