சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான பரிசோதனைக்கான முற்பதிவை, இணையத்தின் ஊடாக பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் இணையமான www.ntimi.lk
ஊடாக அதற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்.
அத்துடன், குறித்த இணையத்திலுள்ள Online Appointments பகுதியின் ஊடாக உரிய தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அதற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்.
இந்த வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று முன் தினம் செத்சிரிபாய போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் போக்குவரத்து சேவை முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.