இவ்வாறு தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான நஸிர் அஹமட்
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நாம் இலங்கையர்கள் என்ற முறையில் இந்த புதிய புத்தாண்டில் அனைத்து இனத் தவர்களும் ஒருமனப்பட்டு இனநல்லிணக்கம், புரிந்துணர்வு, ஐக்கியம், சமாதானம் ஆகியவை இந்த நாட்டில் நிலைநிறுத்தப்படவும் - வலுப்படச்செய்யவும் ஒரணியாக செயற்பட முன்வரவேண்டும்.
நாட்டில் தற்போது தோன்றியுள்ள புரிந்துணர்வின்மை களையப்பட்டு அனைத்து இனத்தவர்களும் சமஉரிமை உடையவர்கள் என்ற கோட்பாடு கட்டியெழுப்பப்பட உறுதி கொள்ள வேண்டும். குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுபட்டு தமது அபிலாஷைகளை பெற்றுக்கொள்ள இவ்வாண்டில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தச் சூழல் உருவாகி உயர்த்துவம்பெற பிறக்கும் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்த வேண்டும் என எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவிட்துள்ளார்.