புத்தகத் திருவிழாவில் புரவலர் ஹாசிம் உமர்


43வது சென்னைப் புத்தகத் திருவிழாவில், பி.எஸ்.ஆர் நிறுவனத்தின் ஆதரவில், மணிமேகலை பிரசுரத்தின் 43 நூல்களின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என். கிருபாகரன் தலைமையில் நடைபெறும் இவ்வெளியீட்டு விழாவில் தமிழ்த் தொண்டாளர்- இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் 43 நூல்களின் முதற்பிரதிகளை பெறவுள்ளார்.

தமிழ் சினிமா நட்சத்தரங்களான வெண்ணிற ஆடை நிர்மலா, வில்லன் நடிகர் நாசர், நகைச்சுவைத் திலகம் மதுரை முத்து, திருமதி சீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள். லேனா தமிழ்வாணன் வரவேற்புரையையும் ஆர்.மோகன்ராஜ் நன்றியுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், திருமதி ஜெயஸ்ரீ சுந்தர் நிகழ்ச்சி நெறியாளராகவும் பங்கேற்கின்றனர்.

புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 10ம் திகதி தமிழகம் செல்லும் புரவலர் ஹாசிம் உமர் 15ம் திகதி நாடு திரும்பவுள்ளார். இந்நிகழ்வுகளில் புரவலர் புத்தகப் பூங்காவின் சார்பில் சிரேஷ்ட கலைஞர் கலைச்செல்வன், புகைப்படக் கலைஞர் இன்பாஸ் சலாஹூதீன் ஆகியோரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -