தேர்தல் வெட்டுப் புள்ளி சம்பந்தமாக சிங்கள தமிழ் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சியாளர்கள் ஒன்று சேர்ந்தே முடிவெடுக்க வேண்டும்-சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்

லங்கை தேர்தல் தொடர்பாக திரு. விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களால் அரசியல் யாப்பின் 22வது திருத்த சட்டம் சம்பந்தமான பிரேரணைக்கு இந் நாட்டிலுள்ள எல்லா சிங்கள தமிழ் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சியாளர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் மட்டும்தான் அதனை வெற்றி கொள்ள முடியுமே தவிர மாறாக முஸ்லிம் கட்சிகள் மட்டும் தனித்து நின்று குரல் கொடுப்பதன் மூலம் இதனை எவ்வளவு தூரம் தடுக்கமுடியும் என்பது கேள்விக்குறியே என்பதை எம்மவர்கள் எல்லோரும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் கருத்தில் கொள்ள வேண்டும், என முஸ்லிம் காங்ரசின் பிரதித் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கமினியூஸ் கட்சியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான டி.யு. குணசேகரா அவர்கள் அண்மையில் இது தொடர்பாக தனது கருத்தினை பத்திரிகை மகாநாட்டில் தெரிவித்துள்ளார். அதனையும் அங்கீகரித்து அவரின் கருத்துக்கு அமைவாகத்தான் இவ்விடையத்தை நாம் ஒன்றுபட்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் இதுவே இன்றைய காலகட்டத்தின் தேவைப்பாடாகும்.

முஸ்லிம்கள் மட்டும்தான் மேற்படி திருத்தசட்டமூலத்தினால் பாதிக்கப்படுவதாக தம்பட்டம் போடாமலும்; அடக்கி வாசித்து காய்களை கச்சிதமாக நகர்த்தித்தான் தமது தேவையை வென்றெடுக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இன்றைய அரசியல் சூழ்நிலை கள நிலவரங்கள் எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு காரியத்தை வென்றெடுக்க வேண்டுமே தவிர வெறும் வீராப்பு வசனங்களில் எதனையும் சாதிக்க முடியாது என்பதை எமது அரசியல் தலைவர்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

இது தொடர்பாக மு.கா வின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களையும் நேரடியாக சந்தித்து இதுபற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்துள்ளேன். எனவே எமது எதிர்கால அரசியல் அடையாளத்தை அடைவதற்கு இவ் விடயம் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன் என்று தனது அறிக்கையில் கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -