பாறுக் ஷிஹான்-
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழா ஆரம்பமாக உள்ள நிலையில் அதன் சுற்றுச்சூழலில் உள்ள சுவர்களில் ஓவியம் வரையும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
குறித்த சுவரோவியங்கள் கல்முனை கடற்கரை மீனவர்களின் வாழ்வாதாரம் குறியீடு சார்ந்த கருப்பொருட்களில் வரைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை(9) முற்பகல் ஆரம்பமாகிய இவ் சுவரோவியம் வரையும் செயற்பாட்டை ஏ.ஆர் மன்சூர் பவுண்டேனசன் அணுசரனை வழங்கியுள்ளது.
குறித்த ஓவியங்கள் முதல்முதலாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை நானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழா எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.