ஐ. ஏ. காதிர் கான்-
இலஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் ஆறு பேரை, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலக வளாகத்தில் (RMV) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சாரதி அனுமதிப் பத்திரத்தைக் குறுகிய காலப் பகுதிக்குள் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, பயனாளிகளிடம் ஒரு தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டிற்கமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இது போன்ற பிற தரகர்கள் தொடர்பான தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், கைதான சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.